“கந்தசஷ்டி விரதம் இருந்த பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்”…..திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் வாய் பேச முடியாத சென்னையை சேர்ந்த வாலிபர் பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.(year 2016)
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் பாலாஜி (30). பிறவியிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்து வருகிறார்.
இவர் அங்குள்ள #சிவன் கோயிலில் 108 வயதான முதியவரும், #ஐயப்ப குருகுல சுவாமியுமான ஒருவருக்கு பணிவிடை செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூருக்கு வரும் பாலாஜி கோயில் பிரகாரத்தில் விரதம் இருப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையிலேயே சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு வந்து விட்டார். கோயில் பிரகாரத்தில் #சஷ்டி_விரதம் இருந்து வருகிறார்.,
.
“ஓம் முருகா, ஓம் முருகா.,” என கூறும்படி கற்றுக் கொடுத்தார். அவரின் பல கட்ட முயற்சிக்கு #பலன் கிடைத்தது.
மாலையில் பாலாஜி, “#ஓம் முருகா, ஓம் முருகா.,” என்று கூறினார். இதுபோல் அம்மா, அப்பா ஆகிய சொற்களையும் வைத்தியலிங்க சுவாமி கூற அவர் திருப்பிக் கூறினார். இவ்வாறு அவர் கூறியது, கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.
.
சுமார் 225 ஆண்டுகளுக்கு முன்பு பிறவி ஊமையாக இருந்த வைகுண்டம் குமரகுருபரர் தனது ஐந்தாவது வயதில் திருச்செந்தூர் #செந்திலாண்டவன் சன்னதியில் ‘கந்தர்கலி வெண்பா’ பாடியதும், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை ஆகிய பாடல்களை இயற்றியதும் குறிப்பிடத்தக்கது.
.
#வெற்றிவேல் முருகனுக்கு., அரோகரா.,
.