தமிழாக்கம்
எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலைபோல்
விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான்
எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம்
தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான்
இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க
வந்திங்கு தேடும் வல்லபை கணேசன்
மங்கள மூர்த்தி மகிமை பிரதாபன்
என்றென்றும் சுபமே தந்திடத் துதித்தேன்
வெல்லும் சொல் அறியேன் விழி பொருள் அறியேன்
உள்ளிடும் சந்தம் தொடுக்கவும் அறியேன்
நல்லதோர் கவிதை நயங்களும் அறியேன்
உள்ளம் தோய்ந்தே உருகிடவும் அறியேன்
எல்லையில்லாததோர் ஒளி வந்து நெஞ்சின்
உள்ளே புகுந்தது ஒராறு முகமும்
சொல் என்று சொல்ல தொடுக்கின்றேன் பாட்டு
வெள்ளமாய் பொங்கி பெருகிடலாச்சு
மயிலேறி வந்தான் மஹாபாக்யப் பொருளாய்
உயிரில் கலந்தான் உள்ளம் கவர்ந்தான்
அழகுக்கு இவன்தான் அணியாக நின்றான்
முனிவர்கள் நெஞ்சில் குடிகொண்ட பெருமான்
யாருக்கும் எளியன் வேதப் பொருளாய்
பாரெல்லாம் காப்பான் ஈசன் குமாரன்
ஈடேற்றி அக்கரை சேர்ப்பேனே என்று
கூறுவான் போல கடலோரம் நின்றான்
செந்தில் வேலன் சிவசக்தி பாலன் கும்பிடும் மலைபோல்
வந்திடும் துயரை வந்தது போலவே திரும்பிடச் செய்வான்
கண்கண்ட தெய்வம் என் நெஞ்சுக்குள் வந்தான்
கந்த மாகெனமெனும் விந்தையூரிலே வந்து
கால் வைப்பர் கைலாயம் காண்பரே
என்று நீ சொல்வதாய் சொல்வதோர் ஷண்முகம்
சந்தோஷம் பொங்கவே தந்திடு நின்னருள்
செந்தூர் கடற்கரை வந்துற்றபோதே பஞ்சமா பாதகம் பறந்திடும்
கந்தனை சிந்தையில் வந்தனை செய்திடும் மங்கள
கந்த மாமலைக்குகை வந்தன காணவே
விழியெலாம் போற்றிடும் அறுமுகன் குகையிலே
கதிரவன் ஆயிரம் செவ்வொளி குவிந்ததோர்
மலர்ச்சரம் சூழ்ந்ததோர் மாணிக்கக் கட்டிலில்
கிருத்திகைப் பெண்டிரால் வளர்ந்தவன் தோன்றுவான்
கந்தமா கோயிலில் அன்னங்கள் குலவிடும்
சண்முகன் சேவடி சதங்கைகள் கொஞ்சிடும்
அமிர்தம் வழிந்திடும் அரவிந்த மலர்ப்பதம்
நெஞ்சமாம் அதில் தோய்ந்திளைப்பாடுக
பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி
கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி
தங்கமயப் பட்டமும் அணிந்துன்னைப் பார்த்தால்
கண் கொள்ளாக் காட்சிதான் செந்தில் குமாரா
எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு
பேரழகு எங்குமில்லா அழகு எங்கும்
நிறைந்தோர் ஆகாயம் போல் கந்தா உ<ன்
இடை தோன்றும் வேண்டியதை நல்கும்
வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து
<உனது திருமார்பில் குங்கும மாமுருகா
மனம்சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா
எது என விளக்கிடுக தாரகனின் பகைவா
ஒருகரம் நான்முகனைச்சிறை வைத்து அடக்கும்
ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும்
ஒருகரம் போரிலே யானைகளை வீழ்த்தும்
ஒருகரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும்
எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும்
அஞ்சதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும்
செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம்
சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்
மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம்
பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும்
திலகமில்லை அழிவதெனும் கரையில்லா நிலவே
கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு
அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன்
அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன்
கண்கள் பனிரெண்டும் பொன்வண்டு கூட்டம்
கமல மலர் வரிசைகளும் கந்தர்முகத் தோற்றம்
காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம்
ஆகாயம் என விரிந்து அழகுமழை பொழியும்
ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப்பார்த்தால்
என்னகுறை வந்துவிடும் செந்தில் வடிவேலோய்
நான் அளித்த பிள்ளை நீஎனைப்போல உள்ளாய்
வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி
ஆறுதலை முகந்து சிவன் அகம் மகிழ்த குமரா
ராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா
ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற
காதுநிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச
போர்வலை மணிமாலை ஆரங்கள் சூழ
ஏகாம்பரம் இடையில் பேரொளியை வீச
பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி
பவழ இதழ் முத்து நகை அழகு முகம் காக்க
நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா
தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா
தாயாரின் மடியினிலே நீ யிருக்கப்பார்த்து
வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க
வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு
ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்
கோலா கலக் குமரா சிவன் புதல்வா கந்தா
வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா
சேனாபதி வள்ளி நாயகனே குகனே
தாரகனே அழித்தவனே சரணம் தாள் சரணம்
கதிகலங்கி கண்கலங்கி பொறிகளெல்லாம் ஒடுங்கி
கபபற்றி எனையிழந்து உ<யிர் பிரியும் நேரம்
நடுநடுங்கி கிடக்கின்ற என்முன்னே வந்து
நானிருக்க பயமில்லை எனக்கூறும் முருகா
வெட்டு இவனை கூறுக்கு வெந்தணலில் பொசுக்கு
கட்டிவா என்றெல்லாம் எமதூதர்கூறும்
துட்ட மொழி கேட்பதற்குள் தோன்றுக நீ மயில்மேல்
வெற்றிவேல் காட்டி எந்தன் வேதனைகள் நீக்கு
வாய்பேச முடியாது வருந்துகிற நேரம்
தாய் போல் நீ வந்து தழுவிட வேண்டும்
ஏது பிழை என்றாலும் மன்னிக்க வேண்டும்
என்னருகே நீ இருந்து காப்பாற்ற வேண்டும்
சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் இவரை
கூர்வேலால் பிளந்தெரிந்த குமரா நீ வருக
தீராத கவலைகள் தீர்த்திடவே வருக
யாரிடத்தில் போய் சொல்வேன் உனையன்றி துணை யார்?
மனக்கவலையெனும் ரோகம் சுமையாக அழுத்தும்
உனைப்பாடும் பணியினையும் இடைபுகுந்து தடுக்கும்
அருட்பிச்சை கேட்கின்றேன் தருக உன்கையால்
எழியோரின் புகலிடமே வருக நீ வள்ளாய்
காக்கை வலி நீரிழிவு ஷயம் குஷ்டம் மூலம்
ஓயாத வயிற்றுவலி உன்மத்தம் காய்ச்சல் தீராத
ரோகங்கள் பிசாசு பூதங்கள் உந்தன் நீரணிந்த
உடனே காதவழி ஓடும்
கண்ணிரண்டும் கந்தா உன் வடிவழகு காண்க
காதிரண்டும் முருகா உன் பேர் சொல்லக் கேட்க
எண்ணமெலாம் உன்நினைவு இவ்வுடலாம் உனக்கே
எந்நாளும் உன்பணியில் உன் புகழை பேச
பண்பாடும் பக்தருக்கே பலனளிப்பார் தேவர்
கொண்டாடும் முனிவருக்கும் கொடுப்பதற்கு வருவாய்
அண்டி நின்று முருகா என்றழுகின்றவர் யார்
சண்டாழ அவரனெனும் சண்முகனே தருவாய்
மனைவிமக்கள் உற்றார் உயிரினங்கள் மற்றோர்
அனைவருமே உனக்காக சேவை செய்ய வேண்டும்
எனை வருத்தும் புள் விலங்கு ஜந்துக்கள் நோய்கள்
எதுஎனினும் உன்வேலால் பொடி படவே வேண்டும்
குற்றமெல்லாம் பொருத்தென்னை மன்னிப்பாய்
பெற்றோர் உற்றவனே நீயும் இவ்வுலகிற்கே தந்தை
முற்றுமெனை மன்னித்து முழுமையாய் ஏற்க
முருகா உன்முகம் கொண்டு கருணையால் பார்க்க
கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம்
செந்தூர்க்கு வணக்கம்
சேவலுக்கு வணக்கம்
முந்திவரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம்
முருகா <உன் வாகனமாம் மாட்டுக்கும் வணக்கம்
எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு
எல்லையிலா மொழி அதனின் பேர்தானே முருகு
சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம்
சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம்
ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம்
ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம்
ஆனந்த மயமான அற்புதனே சரணம்
ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம்
நல்மனை நல்லமக்கள் செல்வங்கள் நீண்ட
ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே
வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன்
புஜங்கத்தை நாளும் நாளும்
அள்ளுக ஆனந்தத்தை அறுமுகன் திருப்பாதத்தை.