பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும்கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம் இவைகளில் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும் இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார்.
[கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆக்குநர்: Yokishivam]