மெல்பேர்ண் முருகன் கோயில்

Melbourne Murugan Temple

முகவரி & தொடர்பு


Address

17-19 Knight Ave, Sunshine North VIC 3020, Australia

GPS

-37.75620465818, 144.83673535053

Telephone


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

மெல்பேர்ண் முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ணில் சண்சைன் நோர்த் (Sunshine North) என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
மெல்பேர்ண் முருகன் கலாசார நிலையம் என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டில் ஒருசங்கம் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டது. ஒரு வேல் வடிவமைக்கப்பட்டு அதற்கு பூசைகள் தொடர்ந்தும் மண்டபங்களில் நடத்தப்பட்டு வந்தது. சுற்றுச் சூழலில் வசித்த இலங்கை, இந்தியா, மலேசியா, பீஜி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்குரிய                                                                                  ஆன்மிக, வழிபாட்டுத் தேவைகளை இது நிறைவேற்றி வந்தது. பின்னர் கோயில் ஒன்றை அமைப்பதற்காக சண்சைன் நோர்த் என்னும் இடத்தில் காணி வாங்கப்பட்டது. வழிபாட்டு மண்டபத்தின் முதல் கட்டம் 1999 இல் பூர்த்தியடையவே பூசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு பகல் முழுவதும் அங்கு வரும் பக்தர்களுக்காக பூசைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட கட்டிடத்தை அமைப்பதற்காக அத்திவாரம் இடப்பட்டது.

Leave a review

Your email address will not be published. Required fields are marked *