GPS
6.6506961347406, 81.773418188095
தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..
இலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம்.
குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது.
முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும்.
புராதன காலத்தில் யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் ஆயிரத்து எண்ணூற்று என்பத்து ஐந்தாம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம்.
கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.
உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.
https://www.kanthakottam.com/b/x5