Address
217 Great Western Hwy, Mays Hill NSW 2145, Australia
GPS
-33.819641238594, 150.98464396974
Telephone
தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..
சிட்னி முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள வைகாசிக் குன்று (Mays Hill) என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டது.
சிட்னியில் முதன்முதலில் முருக வழிபாட்டைத் தொடங்கியவர் திரு சி. தணிகைஸ்கந்தகுமார். 1983ஆம் ஆண்டு முருகன் சிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைத்து தமது இல்லத்திலும் பின்னர் ஸ்ட்ரத்பீல்ட் மகளிர் உயர்நிலைப் பாடசாலையிலும் வழிபாட்டை நடத்தினார்.
1985ஆம் ஆண்டு “சிட்னி சைவமன்றம்” ஆர். வடிவேலு என்பவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1990இல் வீதிப் போக்குவரத்து அதிகரசபையிடம் இருந்து Mays Hill இல் ஒரு காணியைச் சைவமன்றம் வாங்கியது. 1994 ஒக்ரோபர் 9ஆம் நாள் கோயிலுக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. முதலில் தமிழ்க் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டு 1995 ஏப்ரல் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் சித்தி விநாயகர், சிதம்பரேஸ்வரர், சிவகாமசுந்தரி ஆகிய உற்சவமூர்த்திகளுடன் சிட்னி முருகன் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டான். 1997இல் கோயிலின் கட்டிட வேலைகள் ஆரம்பமாகி 1999 யூன் 17ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஐந்து கருவறைகளைக் கொண்டது சிட்னி முருக
ன் ஆலயம். வலது பக்கம் விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிவலிங்கமும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியே சந்நிதிகள் உண்டு. அலங்காரத்தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் கற்பனைத் திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளன.
சிட்னி முருகன் கோயிலில் மகோற்சவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத்
துடனும் பதினோராம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண விழாவுடன் நிறைவடையும்.