Address
281 Jurong East Street 21, Singapore 609605
GPS
1.3416275019527, 103.73896716388
Telephone
Monday
8:30–11:30a.m., 7:15–8:45p.m.
Tuesday
8:30–11:30a.m., 7:15–8:45p.m.
Wednesday
8:30–11:30a.m., 7:15–8:45p.m.
Thursday
8:30–11:30a.m., 7:15–8:45p.m.
Friday
8:30–11:30a.m., 7:15–8:45p.m.
Saturday
8:00–11:30a.m., 7:00–8:45p.m.
Sunday
8:30–11:30a.m., 7:15–8:45p.m.
Hindu temple in Singapore
தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..
சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிங்கப்பூரில் இயங்கத் தொடங்கி, நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும், கடக்கவிருக்கும் கோயில்களுக்கு இடையே அண்மையில் தோன்றி, பங்கையும் ஆற்றும் கோயில் ஜூரோங் ஈஸ்ட் ஸ்ரீட் 21ல் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும்
அருள்மிகு முருகன் ஆலயம்.
இந்த ஆலயத்தின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மிக விமரிசையாக நடை பெற்றது. 1994ஆம் ஆண்டுதான், இங்கு
கோயிலை எழுப்புவதற்கான நிலக் குத்தகைப் பத்திரம் பதிவானது. ஈரடுக்குக் கட்டடம் எழுப்ப, தேசிய வளர்ச்சி அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, 1998ஆம் ஆண்டு ஆலயம் எழுப்புவதற்கு அச்சாரமாக நிலந்திருத்தும் பணி தொடங்கப்பட்டது.
எட்டே மாதத்தில் நிறைவுபெற்ற ஈரடுக்குக் கட்டடத்தில் இந்த ஆலயத்தின் பிரதான மூர்த்திகளும், பரிவார தெய்வங்களும் இடம் மாற்றம் செய்யப்பெற்றன. அதன் பிறகுதான் நுணுக்கமான ஆலய நிர்மாணப் பணிகள் தொடங்கின.
ஆலயப் பணிகளில் தொண்டூழியர்கள் ஆற்றிய பங்கினால் குறிப்பிடத்தக்க நிதி சேமிப்பு ஏற்பட்டதுடன், ஒட்டுமொத்தக் கட்டுமானப் பணிகளின் செலவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்கந்த புராணக் காட்சிகளைப் பிரதிபலித்த நேர்த்தியான, தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்புக் கொண்ட ஆலயம் 3.6 மில்லியன் வெள்ளிச் செலவில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியடைந்தது. குடமுழுக்கு தினத்தன்று, கோபுரங்களுக்குக் கலசாபிஷேகம் செய்யப்படும் சில நொடிகளுக்கு முன்னர், இரண்டு கருடப் பட்சிகள் விமானங்களுக்கு நேராக மேலே வானில் வட்டமிட்ட காட்சி, காண்பதற்கரிதான ஒன்றாக அமைந்தது.
குடமுழுக்கு தினத்தன்று 15,000 த்திற்கும் மேற்பட்ட பக்த கோடிகள் அருள்மிகு முருகனின் ஆசி பெற ஆலயத்தின் முன் திரளாகக் கூடியிருந்தனர்.
அன்று தொடக்கம், இன்று வரை ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வற்றாத நீரோட்டம் என இருந்து வருகின்றது.
தகவல் திரட்டப்பட்டது: சிங்கப்பூர் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத் திருக்குட நன்னீராட்டு விழா மலர் ௨௦௦௯ – நன்றி மெய்யப்பன், கால்கரி